/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்

ADDED : மார் 08, 2025 01:35 AM
பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்
கரூர்:கரூரில், பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயன்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர், செங்குந்தபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் பழனிசாமி, 78. கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்க தலைவர். இவர் கடந்த, 21 அதிகாலை செங்குந்தபுரத்தில் உள்ள, பால் சப்ளை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளை நிற காரில் சென்ற மர்ம கும்பல், பழனிசாமியை பிடித்து இழுத்து கடத்த முயன்றனர். சுதாரித்து கொண்ட பழனிசாமி திருடன், திருடன் என சத்தம் போட்டதால், காரில் வந்த மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.