/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெட்ரோல், டீஸல் மீது வரி குறைக்க பா.ஜ., மாநில து.தலைவர் வலியுறுத்தல்
/
பெட்ரோல், டீஸல் மீது வரி குறைக்க பா.ஜ., மாநில து.தலைவர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீஸல் மீது வரி குறைக்க பா.ஜ., மாநில து.தலைவர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீஸல் மீது வரி குறைக்க பா.ஜ., மாநில து.தலைவர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
வேலாயுதம்பாளையம்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில துணை தலைவர் திருமலைசாமி பேசியதாவது: பெட்ரோல், டீஸல் விலை உயர்ந்து செல்வதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் வரிவிதிக்கின்றன. இதனை காரணம் கொண்டு எண்ணைய் நிறுவனங்களும் விலை உயர்த்தும் போது தனியார் நிறுவன ங்கள் பெட்ரோல், டீஸல் விø லயை காரணம் காட்டி, பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது 'டிரேசர்' போர்டு விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் அனைத்து பொருட்களின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் விலை உயர்ந்து தற்போது கடுமையான விலைவாசி உயர்வையும் ஏற்படுத்திவிட்டது. எனவே, பெட்ரோல், டீஸல் மீது மத்திய அரசின் வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்ட தலைவர் சிவசாமி, பொது செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர்கள் சிவா, செல்லபாலு, மாவட்ட செயலாளர் கோபி, கரூர் ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா, கரூர் மாவட்ட செயலாளர் சென்னியப்பன், கோட்ட பொறுப்பாளர் திருமலை உள்பட பலர் பங்கேற்றனர்.