/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி பணி மும்முரம்
/
லாலாப்பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி பணி மும்முரம்
லாலாப்பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி பணி மும்முரம்
லாலாப்பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி பணி மும்முரம்
ADDED : டிச 22, 2024 01:18 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 22-
லாலாப்பேட்டையில், பொங்கல் பானை உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். சீஸன் தோறும் அகல் விளக்குகள், பானை, சட்டி ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை துவங்குகிறது. இதற்கு தேவையான, பொங்கல் பானைகளை உற்பத்தி செய்யும் பணிகளில், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லாலாப்பேட்டை காவிரி படுகையில் உள்ள, களி மண்ணை எடுத்து அதன் மூலம் பானை உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, பானைகளுக்கு சிவப்பு சாயம் ஏற்றும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வாரச் சந்தைகளில் பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பானை ஒன்று, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.