/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடுகள் அடைக்கும் பட்டிகளைசுத்தம் செய்யும் பணி மும்முரம்
/
ஆடுகள் அடைக்கும் பட்டிகளைசுத்தம் செய்யும் பணி மும்முரம்
ஆடுகள் அடைக்கும் பட்டிகளைசுத்தம் செய்யும் பணி மும்முரம்
ஆடுகள் அடைக்கும் பட்டிகளைசுத்தம் செய்யும் பணி மும்முரம்
ADDED : ஜன 12, 2025 01:14 AM
கரூர், :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் அடைக்கும் பட்டிகளை சுத்தம் செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 பஞ்சாயத்துகளில் உள்ள குக்கிராமங்களில், விவசாயிகள் உப தொழிலாக ஆடு, எருமை, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். எருமை, மாடுகளை கொட்டகைகளிலும், ஆடுகளை தங்களது தோட்டத்தில் பட்டிகள் அமைத்து வளர்த்து வருகின்றனர்.
சில விவசாயிகள், குத்தகைக்கு ஆடுகளுடன் பட்டிகளை நடத்தி பராமரிக்கின்றனர். பட்டிகள் முன்னர் மூங்கில்களால் ஆன தட்டிகளால் அமைக்கப்பட்டன. இவை கரையான் மற்றும் வெயில், மழை போன்றவைகளால் சேதமடைந்து விடுகின்றன. இதனால், இப்பகுதியில் தற்போது பெரும்பாலான விவசாயிகள், இரும்பு கம்பிகளால் பட்டிகளை அமைத்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, பட்டிகளை சுத்தப்படுத்தி, வண்ணம் பூசும் பணியில் கால்நடை வளர்ப்பவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.