/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி உபரி நீரை ஏரி, குளங்களுக்குகொண்டு செல்ல வலியுறுத்தி தீர்மானம்

ADDED : ஜன 17, 2025 01:11 AM
காவிரி உபரி நீரை ஏரி, குளங்களுக்குகொண்டு செல்ல வலியுறுத்தி தீர்மானம்
கரூர்: காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட பேரவை கூட்டம் நடந்தது. நிர்வாகி வீரமலை தலைமை வகித்தார். பருவ மழை காலங்களில், காவிரி ஆற்றில் உபரி நீராக பல லட்சம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
ஆனால், பருவமழை காலங்களில் கூட கடவூர் வட்டார பகுதிகளில், போதுமான மழை இல்லாமல் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயம் அழிந்து வருவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
பருவ மழை காலங்களில், காவிரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை கடவூர் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீரை நிரப்பிடும் வகையில், அறிவிக்கப்பட்ட திட்டத்தை உடனே தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் சக்திவேல், வட்டார செயலாளர்கள் பழனிவேல், வேல்
முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.