குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
ADDED : ஜன 24, 2025 01:40 AM
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
குளித்தலை, : கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதிகளில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி சின்ன நாயக்கனுார், மாயனுார், மேட்டு மகாதானபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணராய புரம் சிவகாமசுந்தரி குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கரூர் எம்.பி. ஜோதிமணி, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுக்களை, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பெற்று கொண்டார். மாயனுாரில் நடந்த நிகழ்ச்சியில், மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 30 லட்சம் ரூபாய், 10 தனி நபர்களுக்கு ஒன்றிய வளர்ச்சி நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் என, வங்கிக் கடன்களுக்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து, குளித்தலை சட்டசபை தொகுதி சிந்தலவாடி மாரியம்மன் கோவில், சிவாயம் பஞ்., ஆதனுார் மாரியம்மன் கோவில் முன் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன் அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.
ஒன்றிய செயலர்கள் கிருஷ்ணராயபுரம் ரவிராஜா, கதிரவன், கரிகாலன், குளித்தலை ஒன்றிய செயலர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், தாசில்தார்கள் பிரபாகரன், இந்துமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
