தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'கள்' விவாதத்தில் பங்கேற்க காங்., தலைவர்களுக்கு நல்லசாமி அழைப்பு

'கள்' விவாதத்தில் பங்கேற்க காங்., தலைவர்களுக்கு நல்லசாமி அழைப்பு

'கள்' விவாதத்தில் பங்கேற்க காங்., தலைவர்களுக்கு நல்லசாமி அழைப்பு


ADDED : ஜன 31, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'கள்' விவாதத்தில் பங்கேற்க காங்., தலைவர்களுக்கு நல்லசாமி அழைப்பு

கரூர்:'கள்ளுக்கு தடை விதிக்க வேண்டும்' என்ற விவாதத்தில் காங்., தலைவர்கள் பங்கேற்கலாம்' என, 'கள்' நல்லசாமி தெரிவித்தார்.

கள் போதைப் பொருள் அல்ல என்று வாதிட்டதில், ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் அடிப் படையில், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக சொல்லி, ஏமாற்றிய நல்லசாமி மீண்டும், 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்திருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில், காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் சார்பில், தமிழக காங்கிரஸ் செயலாளர் பாஸ்கர் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில், கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விசாரணைக்கு ஆஜரானார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம். மக்கள் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடை

முறையாகும் முன், இவற்றை முன்னிறுத்தி, 20 ஆண்டுகளாக கள் இயக்கம் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது. கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள்தான் என அரசு தரப்பு, அரசியல் கட்சிகள் தரப்பு நிரூபித்து விட்டால், ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவித்தது. இது தொடர்பாக, 2011-ம் ஆண்டுக்கு முன் குமரி அனந்தன் பங்கேற்று சென்னையில் விவாதம் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி பங்கேற்ற போது, குமரி அனந்தனால் உரிய பதிலை சொல்ல முடியவில்லை. அப்போது, கள் இயக்க நிர்வாகிகளுக்கும், குமரி அனந்தனுக்கும் பிரச்சனை வந்த நிலையில், அந்தக் கூட்டம் நிறுத்தப்பட்டது.

கடந்த, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, விவாதத்தில் தோற்றதால், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்று தர வேண்டும் என குமரிஅனந்தன் புகார் மனு அளித்துள்ளார். முகாந்தரம் இல்லாத இந்த வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பி இருப்பது சட்டத்திற்கு விரோதமானது.

குமரி அனந்தன், செல்வப்பெருந்தகை, தங்கபாலு, அழகிரி, சிதம்பரம், ஜோதிமணி என காங்., கட்சியைச் சேர்ந்த அனைவரும் விவாதத்தில் பங்கேற்கட்டும்; நானும் வருகிறேன். கள்ளுக்கு தடை விதிக்க கூடாது என்பது எங்களுடைய நோக்கம். கள்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். விவாதத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால், கள் இயக்கம் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்.

ஒரு திரைப்பட நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால், சினிமா நடிகர்களுக்கு அதிக அறிவு, ஆளுமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us