sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மிளகாய் சாகுபடியில் பயிர் மேலாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் யோசனை

/

மிளகாய் சாகுபடியில் பயிர் மேலாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் யோசனை

மிளகாய் சாகுபடியில் பயிர் மேலாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் யோசனை

மிளகாய் சாகுபடியில் பயிர் மேலாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் யோசனை


ADDED : பிப் 01, 2025 12:52 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிளகாய் சாகுபடியில் பயிர் மேலாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் யோசனை

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிதா, மிளகாய் பயிர் சாகுபடியில் பயிர் மேலாண்மை குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மிளகாய் சாகுபடி ஆண்டுக்கு, 3 பருவங்களில் பயிர் செய்யப்படுகிறது. மிளகாய் செடியை பொறுத்தவரை வளரும் பருவம், பூக்கும் பருவம், காய் விடும் பருவம் என, 3 பருவத்திலும் பல விதமான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பாக மிளகாயை இலைப்பேன், அசுவினி, செஞ்சிலந்தி ஆகிய, 3 வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான மருந்துகள் தெளித்தும், பொறிகள் அமைத்தும் கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன், மிளகாய் இலைகளில் சாற்றை உறிஞ்சி, இலைகள் சுருங்கி, சுருண்டு விடுகின்றன. அவை இலையின் மேற்பரப்பை சிதைத்து, 'வெள்ளி அல்லது வெண்கல தோற்றத்தை' ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட பூ மொட்டுகள் உடைந்து, கீழே விழுந்துவிடும். இப்பூச்சியின் தாக்குதல் காணப்பட்டால், தண்ணீர் தெளிப்பான் மூலம் செடிகள் நன்கு நனையும்படி தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும். அதிகம் இலைப்பேன் இருந்தால், 1 லிட்டர்

தண்ணீரில், 2 மி.லி., டைமெத்தோயேட் அல்லது பிபரோனில், 1.5 மில்லி என்ற மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 10 எண்ணிக்கையில், நீல நிற ஒட்டும் அட்டை பொறியை பயன்படுத்தவும்.

அசுவினி பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள், வெளிர் நிற மாற்றம் அடையும். அவை சிதைந்து அல்லது சுருண்டு போகலாம். இப்பூச்சி தேன் போன்ற திரவத்தை சுரப்பதன் காரணமாக, பூஞ்சாண நோய் ஏற்பட வழிவகுக்கிறது. ஒரு ஏக்கருக்கு, 10-12 எண்ணிக்கையில் மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைக்க வேண்டும். இந்நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில், 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம் நட வேண்டும். வெர்டிசிலியம் லெகானி, 5 மில்லியை, தண்ணீரில் கலந்து தெளிக்கவும், இமிடாகுளோபிரிட், 3.5 மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் பசை கலந்து தெளிக்கவும்.

சிலந்தி பூச்சிகளால் பாதிக்கப்பட்ட மிளகாய் இலைகள், கீழ்நோக்கி சுருண்டு, சுருங்கும் தோற்றத்துடன் காணப்படும். இதேபோல், ஒரு ஏக்கருக்கு, 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தும் அழிக்கலாம்.

இப்பொறிகள் வைக்கும் போது, கீழே தண்ணீரும், அதில், 2 சொட்டு மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும். டிரைக்கோ கிராமா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை, ஒரு ஏக்கருக்கு, 12 இடத்தில் கட்டியும் இப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப் படுத்தலாம். மிளகாய் செடியில் பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட், 10 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளிப்பதால், பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதேபோல் துளிரும் நன்றாக வரும், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். மேலும், மிளகாய் செடிக்கு அருகில் உளுந்து செடி, பாசிப்பயறு செடிகளை நடவு செய்வதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us