தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் கரூர் கலெக்டர் அறிவிப்பு

மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் கரூர் கலெக்டர் அறிவிப்பு

மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் கரூர் கலெக்டர் அறிவிப்பு


ADDED : பிப் 02, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : 'மாவட்டத்தில் மினி பஸ் இயக்க, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம், 25 கி.மீ ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில், 65 சதவீததுக்கு குறைவாக இருக்கக் கூடாது. தொடக்கம் மற்றும் முடியும் இடம் சேவை செய்யப்படாத கிராமத்தில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்று பஸ் ஸ்டாப் அல்லது பஸ் ஸ்டாண்டாக இருக்க வேண்டும். துவங்கும் இடத்தில் இருந்து, அடுத்த ஒரு கி.மீ., துாரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, ரயில் ஸ்டேஷன், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை கூடம், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள இடமாக இருக்க வேண்டும்.

மாநில போக்குவரத்து நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்றவை, மேற்கூறிய தேவைப்-படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கி.மீ., வரை கூடுதல் துாரத்தை அனுமதிக்கலாம். பழைய மினி பஸ் திட்டத்தில் ஏற்கனவே, பர்மிட் பெற்ற பஸ் உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தில் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக அளித்து பர்மிட்டை ஒப்ப-டைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில், குறைந்தபட்சம், 1.5 கி.மீ., கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும். மினி பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கை தவிர்த்து, பயணிகள் இருக்கை, 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பஸ்சின் வீல்பேஸ், 390 செ.மீ-., மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே, கரூர் மாவட்டத்தில், இந்த புதிய விரிவான திட்டத்தின் கீழ், மினி பஸ்கள் இயக்குவதற்கு, வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us