தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி


ADDED : பிப் 14, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

குளித்தலை, : அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும், கழிவு நீரால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாயனுார், பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டடத்தில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு நீர் வாய்க்கால் போல் ஓடுகிறது. கழிவு நீரை மிதித்தபடி, மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள், புற நோயாளிகள், உள்நோயாளிகள் கடந்து செல்கின்றனர். பொது மக்கள் நலன் கருதி கழிவு நீரை அகற்றி, நோய் தடுப்பு

நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us