தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'தென்கரை பாசன வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும்'

'தென்கரை பாசன வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும்'

'தென்கரை பாசன வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும்'


ADDED : பிப் 18, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தென்கரை பாசன வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும்'

குளித்தலை:குளித்தலை அடுத்த, மருதுார் அக்ரஹாரத்தில் தென்கரை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சேட்டு தலைமை வகித்தார். கவுரவ தலைவர்கள் சம்பத், பொருளாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என, தீவிர விவசாயி நாகராஜன் பேசினார்.

தொடர்ந்து, தென்கரை பாசன வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்காலில், மே மாதம் மட்டும் தண்ணீர் நிறுத்தம் செய்து மற்ற, 11 மாதங்களும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். மருதுார் உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே, அறிவிக்கப்பட்ட கதவணை திட்டத்தை மீண்டும் தமிழக முதல்வர்

அறிவிப்பு செய்து, பணிகளை துவங்க வேண்டும் என, கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்கால்களில், தடையில்லாமல் தண்ணீர் வழங்க வலியுறுத்தி இன்று காலை 10:00 மணியளவில் குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகே, அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பேரணியாக பெரிய பாலத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சங்க பொறுப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us