/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னிலை கீழ்பாகத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
/
தென்னிலை கீழ்பாகத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தென்னிலை கீழ்பாகத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தென்னிலை கீழ்பாகத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ADDED : பிப் 26, 2025 01:05 AM
தென்னிலை கீழ்பாகத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கரூர்:தென்னிலை கீழ்பாகத்தில், நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், தென்னிலை கீழ்பாகம் கிராமத்தில் உள்ள லட்சுமி மஹாலில், மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நாளை (27ம் தேதி) பகல், 11:00 மணியளவில் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூற உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறைகள் சார்பில் கண்காட்சி நடக்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.