தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தான்தோன்றிமலை கோவிலில் மாசிமக விழாவிறுவிறுப்பாக நடக்கும் தேர் அலங்கார பணி

தான்தோன்றிமலை கோவிலில் மாசிமக விழாவிறுவிறுப்பாக நடக்கும் தேர் அலங்கார பணி

தான்தோன்றிமலை கோவிலில் மாசிமக விழாவிறுவிறுப்பாக நடக்கும் தேர் அலங்கார பணி


ADDED : மார் 07, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தான்தோன்றிமலை கோவிலில் மாசிமக விழாவிறுவிறுப்பாக நடக்கும் தேர் அலங்கார பணி

கரூர்:-கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த, 2ல் சிறப்பு பூஜையுடன் விழாவுக்கான, பூர்வாங்க பணிகள் தொடங்கின. அப்போது, வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த, 4ல் காலை, 9:00 மணிக்கு மாசிமக தெப்பத் திருவிழா வுக்காக கொடியேற்று விழா கோவிலில் நடந்தது.

வரும், 10ல் திருக்கல்யாண உற்சவம், 12ல் தேர்த்திருவிழா, 14ல் தெப்ப உற்சவம், 15, 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாசிமக திருவிழாவை முன்னிட்டு, மரத்தாலான தேரை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தேர் சுத்தப்

படுத்தி, அழகுபடுத்தப்பட்டு வருகிறது. தேர், மணிகளுக்கு வண்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us