தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்

திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்

திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்


ADDED : மார் 13, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்

கரூர்: கரூர், மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில், சாக்கடை கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மினி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் உள்ளன.

இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில், சாக்கடை கழிவு

நீர் கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, கரூரில் மழை பெய்து வரும் நிலையில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் மழை நீருடன் ஓடியபடி உள்ளது. இதனால், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மினி பஸ் ஸ்டாண்ட் செல்லும் பொது மக்கள், மாணவ, மாணவியர், சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். எனவே, சாக்கடை கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மூட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us