தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும்காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும்காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும்காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்


ADDED : மார் 16, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும்காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்

கரூர்:கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த ஒரு பாலம்தான் பயன்பாட்டில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பழைய பாலத்தின் அருகே, புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், பழைய பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு செல்லும், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பாலத்தின் இரு பக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள, பெரும்பாலான மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, பழைய உயர்மட்ட பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைத்து, அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us