/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்களின்தேர்வு; இன்று பதிவு செய்ய கடைசி நாள்

ADDED : மார் 20, 2025 01:14 AM
நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்களின்தேர்வு; இன்று பதிவு செய்ய கடைசி நாள்
கரூர்:நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்களின் தேர்வு, இன்றுக்குள் பதிவு செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோவை, தஞ்சாவூர், வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய எட்டு இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்தாண்டு நடக்கும் விழாவில், பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22, 23 ஆகிய நாட்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை, கை சிலம்பாட்டம், இறைநடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு, பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 அன்றும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர்கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரத நாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சி மார்ச் 23ல், கரூர் நாரதகான சபாவில்
நடக்கிறது.மாவட்ட அளவிலான தேர்வில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் https://artandculture. tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று ( 20ம் தேதி) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது கரூர் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் ரேவதி, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, கரூர், தொலைபேசி 9500277994 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து
கொள்ளலாம்.இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல்
தெரிவித்துள்ளார்.