sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்துநகை, கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு

/

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்துநகை, கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்துநகை, கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்துநகை, கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு


ADDED : ஏப் 10, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்துநகை, கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு

குளித்தலை:குளித்தலை, பெரியார் நகரை சேர்ந்த நிர்மல்ராஜ், 35, திருச்சியில தபால் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி சுகன்யா, 32, கர்நாடகாவில் தார்வார்டு பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், மனைவிக்கு துணையாக திருச்சியில் இருந்து சமீபத்தில் கர்நாடகாவுக்கு நிர்மல்ராஜ் பணியிடம் மாற்றம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று காலை, 9.00 மணியளவில் அவரது அண்ணன் பொன்ராஜ்கர்ணன், வீட்டில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. உள்ளே பார்த்தபோது, இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன.

குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் 'சிசிடிவி' கேமரா பதிவுகள் யாருக்கும் கிடைக்காத வகையில், ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றனர்.

இது குறித்து பொன்ராஜ் கர்ணன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us