தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிவாலயங்களில் பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு

சிவாலயங்களில் பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு

சிவாலயங்களில் பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு


ADDED : ஆக 02, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.

பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us