தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இருக்கை இல்லாத சுங்ககேட் பஸ் ஸ்டாப் நிழற்கூடம்

இருக்கை இல்லாத சுங்ககேட் பஸ் ஸ்டாப் நிழற்கூடம்

இருக்கை இல்லாத சுங்ககேட் பஸ் ஸ்டாப் நிழற்கூடம்


ADDED : நவ 30, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், நவ. 30-

கரூர் அருகே, நிழற்கூடத்தில் இருக்கைகள் இல்லாததால், பயணிகள் உட்கார முடியாமல்

அவதிப்படுகின்றனர்.

கரூர் சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளுக்கு முன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. அப்போது, பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டது. நாளடைவில் உடைந்தும், காணாமலும் போயின. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட் கார முடியாமல்

அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மாயனுார், புலியூர் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, மாற்று பஸ்சில்தான் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில், சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடத்தில் இருக்கை வசதி இல்லாததால், முதியவர்கள் உள்பட பயணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல், தரையில் அமரும் நிலை உள்ளது.

எனவே, சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடத்தில் இருக்கைகள் அமைக்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us