/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்ட ஆலோசனை கூட்டம்
/
குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்ட ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 18, 2024 01:53 AM
குளித்தலை, டிச. 18-
குளித்தலை அடுத்த, முள்ளிப்பாடி ஊராட்சி மன்றத்தில், குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
முள்ளிப்பாடி பஞ்., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, பஞ்.. தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். சேர்வைகாரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், முள்ளிப்பாடி வி.ஏ.ஓ., சுரேஷ், முள்ளிப்பாடி பஞ்., செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தல், பாலியல் தொந்தரவு மற்றும் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொடுத்தல், குழந்தைகளை பராமரிக்க முடியாத குடும்பங்களை அறிந்து, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களை எடுத்துக் கூறி வழி காட்ட வேண்டும், என வலியுறுத்தப்
பட்டது.
இக்கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.