தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி பஞ்., யூனியனை பிரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

க.பரமத்தி பஞ்., யூனியனை பிரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

க.பரமத்தி பஞ்., யூனியனை பிரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 11, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனை, இரண்டாக பிரித்து, சின்னதாராபுரம் பெயரில் தனி யூனியனை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில், எட்டு பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. அதில், 30 கிராம பஞ்சாயத்துக்களை கொண்ட, பெரிய பஞ்சாயத்து யூனியனாக, க.பரமத்தி செயல்பட்டு வருகிறது. க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து வடக்கே, 14 கிலோ மீட்டர் துாரத்தில் நொய்யலும், தெற்கே, 25 கிலோ மீட்டர் துாரத்தில் ராஜபுரமும், கிழக்கே, 10 கிலோ மீட்டர் துாரத்தில் தண்ணீர்பந்தலும், மேற்கே, 20 கிலோ மீட்டர் துாரத்தில் வைரமடையும்

எல்லைகளாக உள்ளது.அதில், இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 30 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 246 வார்டு உறுப்பினர்கள், கடந்த, 2019ல் நடந்த ஊரக பகுதி

உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் கடந்த, 4ல் நிறைவு பெற்றது. சிறப்பு அரசு துறை அதிகாரிகள், பொறுப்புக்கு வந்துள்ளனர்.

இதனால், பஞ்சாயத்து யூனியன் மூலம், செயல்படுத்தப்படும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை வீடு திட்டம், சிமென்ட் தேவை மற்றும் குடிநீர் பிரச்னைக்காக, பொதுமக்கள் பல கிலோ மீட்டர் துாரம் உள்ள, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், யூனியன் அதிகாரிகளை சந்திக்க, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், சில சமயங்களில் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனால், வளர்ச்சி திட்டங்கள் எளிதில் சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, 15 பஞ்சாயத்துகள் அடங்கிய, புதிய பஞ்சாயத்து யூனியனை உருவாக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us