தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாய்க்காலில் ஆகாய தாமரை அகற்ற மக்கள் வேண்டுகோள்

வாய்க்காலில் ஆகாய தாமரை அகற்ற மக்கள் வேண்டுகோள்

வாய்க்காலில் ஆகாய தாமரை அகற்ற மக்கள் வேண்டுகோள்


ADDED : ஜன 23, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாய்க்காலில் ஆகாய தாமரை அகற்ற மக்கள் வேண்டுகோள்

கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றின், கிளை வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரை செடிகள், கழிவு குப்பையை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் களை பறித்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகள் நடப்பதால், அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, பல நாட்களாகவே குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர்--வாங்கல் சாலையின் குறுக்கே செல்லும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளது. மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்து காணப்படுகிறது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us