தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : ஜன 24, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

குளித்தலை,: குளித்தலையில், முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின், 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

குளித்தலை நகர செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலர்கள் விஜயவிநாயகம், கருணாகரன், சந்திரசேகரன். ரங்கசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மருதுார் நகர செயலர் தமிழ்ச்செல்வன், அமைப்பு செயலர் துரை செந்தில், தலைமை பேச்சாளர் இளமுருகன்

ஆகியோர் பேசினர்.கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழகத்தை, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக முதல் இடத்திற்கு கொண்டு வந்துள்ளது தி.மு.க., அரசு. மேலும் போதை பழக்க வழக்கங்களும் அதிகரித்துவிட்டது. இதுதான் தி.முக., அரசின் சாதனை. அ.தி.மு.க., ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, போலீசாரின் அனுமதி கிடைப்பதில்லை. 2026

சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us