தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு

சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு

சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு


ADDED : ஜன 24, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, : குளித்தலை பஸ் ஸ்டாண்டு, கடை வீதியில் கடந்த ஒரு வாரமாக, 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பாதுகாப்பு இல்லாமலும், அரைகுறை ஆடைகளுடனும் சில சமயங்களில் போக்குவரத்து இடையூறு செய்தும் வந்தார். அவரை மீட்டு, சாந்திவனத்தில் அனுமதித்து மனநல சிகிச்சையளித்து உதவிட வேண்டுமென, கருர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மோகன்ராஜ் ஆலோசனையின்படி, சாந்திவனம் மனநல காப்பகத்தின் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினரான அரசப்பன் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்.

அதன்படி, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையில், சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் மற்றும் கண்காணிப்பாளர் வேல்முருகன், செவிலியர் அனிதா ஆகியோர் கொண்ட மீட்புக்குழுவினர், சுற்றித்திரிந்த நபரை மீட்டு திருச்சி, தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us