/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்கள் பெறும் நிகழ்வு
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்கள் பெறும் நிகழ்வு
ADDED : ஜன 25, 2025 01:25 AM
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்கள் பெறும் நிகழ்வு
கிருஷ்ணராயபுரம்:குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கிருஷ்ணராயபுரம் கிழக்கு பகுதியில், மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில், மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பிள்ளபாளையம் பஞ்சாயத்துகளில் உள்ள மக்களிடம் இருந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்,ஏ., சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன்,
குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ மற்றும் கிருஷ்ணராயபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.