தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு

மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு

மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு


ADDED : ஜன 30, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு

கரூர்:மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்கும் வகையில், கரூர் மாவட்ட அணிக்கு, பரணி பார்க் பள்ளியில் நாளை (31ல்) வீரர்கள் தேர்வு நடக்கிறது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மன் மோகனரங்கன், தலைவர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், 64வது மாநில அளவிலான சப்-ஜூனியர் மற்றும் கேடட் கேரம் சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் பிப்., 7, 8, 9 ஆகிய தேதிகளில் சேலம் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.

அதில், பங்கேற்கும் வகையில் கரூர் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை காலை, 9:00 மணிக்கு பரணி பார்க் பள்ளியில் நடக்கிறது. எனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் சப்-ஜூனியர் பிரிவில் விளையாட, 10.2.2011 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

கேடட் பிரிவில் விளையாட, 10.02.2013 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கேரம் சங்க பொருளாளர் செந்தில் குமாரை, 97509-91014 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us