/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூர் டவுன்., பஞ்சாயத்தில்தொழில் உரிமம் கட்டணம் உயர்வு
/
புலியூர் டவுன்., பஞ்சாயத்தில்தொழில் உரிமம் கட்டணம் உயர்வு
புலியூர் டவுன்., பஞ்சாயத்தில்தொழில் உரிமம் கட்டணம் உயர்வு
புலியூர் டவுன்., பஞ்சாயத்தில்தொழில் உரிமம் கட்டணம் உயர்வு
ADDED : ஜன 30, 2025 01:23 AM
புலியூர் டவுன்., பஞ்சாயத்தில்தொழில் உரிமம் கட்டணம் உயர்வு
கரூர்:புலியூர் டவுன் பஞ்சாயத்தில், தொழில் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம், டவுன் பஞ்., தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தொழில் உரிமம் கட்டணம் உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், அட்டவணை, 1ல், தொழில்களுக்கு ஆண்டுக்கு, குறு தொழில் நிறுவனங்கள், 750 முதல் 2,000 ரூபாய் வரையும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 2,000 முதல், 3,500 ரூபாய் வரையும், நடுத்தர தொழில் நிறுவனங்கள், 5,000 முதல், 8,000 ரூபாய் வரையும், பெரிய தொழில் நிறுவனங்கள், 7,500 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
அட்டவணை, 2ல், வர்த்தக நிறுவனங்கள், 500 முதல், 7,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அட்டவணை, 3ல் உணவகங்களுக்கு, 750 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையும், மகளிர், சிறுவர் ஹாஸ்டல், 750 முதல், 2,000 ரூபாய் வரையும், லாட்ஜ்களுக்கு, திருமண மண்டபங்கள், 2,000 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரையும், அட்டணை, 4ல், தனியார் வாகன நிறுத்தம், 1,500 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.