/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'தி.மு.க.,வின் சுயரூபம் தெரிந்து விட்டதால்அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமையும்'

ADDED : பிப் 05, 2025 01:14 AM
'தி.மு.க.,வின் சுயரூபம் தெரிந்து விட்டதால்அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமையும்'
கரூர், :''தி.மு.க., ஆட்சியின் சுயரூபம் தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டதால், அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமையும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் ராஜாளி செல்வம் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டவர்கள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த, தி.மு.க., எதையும் முழுமையாக செயல்படுத்தவில்லை. அமைச்சர்கள் முதல், முதல்வர் வரை, சதவீத கணக்குகளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. இதனால், தி.மு.க., ஆட்சியின் சுயரூபம் மக்களுக்கு தெரிந்து விட்டதால், அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி
தான் அமையும். அப்போது, முதல்வராக வரும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிறுத்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு மீண்டும் வழங்குவார். அ.தி.மு.க., ஆட்சி அமைய நீங்கள் பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட அவைத்தலைவர் திரு விகா, ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், மாணவர் அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில், கரூர் சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.