தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காவிரியாற்று பகுதி கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

காவிரியாற்று பகுதி கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

காவிரியாற்று பகுதி கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : பிப் 05, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு



காவிரியாற்று பகுதி கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர், :

கரூர் அருகே, காவிரியாற்று பகுதியில் உள்ள கழிப்பிடம் மற்றும் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அதில், பவுர்ணமி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், காவிரியாற்று நீர் மூலம் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். கரூர் பஸ் ஸ்டாண்ட் வழியாக, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் செல்ல வசதியாக, பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், நெரூர் காவிரியாற்றில் ஆடிப்பெருக்கு, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்களில் புனித நீராடுவர். இதனால், பொதுமக்கள் வசதிக்காக காவிரியாற்றின் கரையோர பகுதியில், கழிப்பிடங்கள், சிறுவர் பூங்கா ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கழிப்பிடங்கள், பூங்கா ஆகியவை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், நெரூர் தெற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us