/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கல்
/
பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கல்
ADDED : பிப் 08, 2025 12:53 AM
பள்ளி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கல்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேர்வுகளில் அதிகம் மதிப்பெண் பெறுவதற்காக வினா-விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்,ஏ., சிவகாம சுந்தரி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம், மாயனுார், பழைய ஜெயங்கொண்டம், சேங்கல் ஆகிய அரசு பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், வினா- விடை புத்தகம் வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம் வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* குளித்தலை சட்டசபை தொகுதியில், செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை புத்தகங்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த நிதியில் இருந்து, கரூர் மாவட்டம் முழுவதும் வழங்கி வருகிறார்.
நேற்று காலை குளித்தலை அரசு மகளில் மேனிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, அரசு வக்கீல் சாகுல் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம்
புத்தகங்கள் வழங்கினார்.இதேப்போல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வழங்கப்பட்டது. இனுங்கூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாஜி மாவட்ட பஞ்.,குழு துணைத்தலைவர் தேன்மொழிதியாக ராஜன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.