/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அசாம் மாநில பெண் கொலைவாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
அசாம் மாநில பெண் கொலைவாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 15, 2025 02:05 AM
அசாம் மாநில பெண் கொலைவாலிபருக்கு ஆயுள் தண்டனை
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை கொலை செய்ததாக, அதே மாநிலத்தை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அசாம் மாநிலம், ரங்கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மு, 32; இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மூலிமங்கலத்தில் உள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை செய்து வந்தார்.
அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரியும் அசாம் மாநிலம் சசிபூர் பகுதியை சேர்ந்த சின்டாமொனி போரோ, 44, என்ற பெண்ணுக்கும், சுபோல் முர்முக்கும் கள்ளக்காதல் இருந்தது. சின்டாமொனி போரோ ஏற்கனவே, திருமணமானவர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுபோல் முர்மு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதாக, சின்டாமொனி போராவிடம் கூறியுள்ளார். ஆனால், சின்டா மொனி போரோ, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கடந்தாண்டு ஜன., 7 இரவு, சுபோல் முர்முவிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுபோல் முர்மு, சின்டாமொனி போரோவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
வேலாயுதம்பாளையம் போலீசார், சுபோல் முர்முவை கைது செய்து, கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சின்டாமொனி போரோவை கொலை செய்ததாக, சுபோல் முர்முவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். இதையடுத்து சுபோல் முர்முவை, திருச்சி மத்திய சிறைக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.