/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் தண்ணீர் சேமிப்புகோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது
/
மாயனுார் கதவணையில் தண்ணீர் சேமிப்புகோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது
மாயனுார் கதவணையில் தண்ணீர் சேமிப்புகோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது
மாயனுார் கதவணையில் தண்ணீர் சேமிப்புகோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது
ADDED : பிப் 21, 2025 12:44 AM
மாயனுார் கதவணையில் தண்ணீர் சேமிப்புகோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது
கரூர்:மாயனுார் கதவணையில், தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், கோடை காலத்தில்
குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.மாயனுார் காவிரியாற்றில், 1.05 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில் மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, நான்கு கிளை வாய்க்கால்கள், காவிரியாற்றில் முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சம்பா சாகுபடி முடிந்த நிலையில் கடந்த ஜன., 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மாயனுார் கதவணையில் இருந்தும் காவிரியாறு, கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து வெளிவரும் உபரி நீர் முழுவதும், தற்போது, மாயனுார் கதவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 105 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாறு, வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், கதவணையில் கடல் போல தண்ணீர் தேங்கியுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணையில் நீர்மட்டம், 110 அடியாக உள்ளது. கடந்தாண்டு, செப்., முதல் ஜனவரி வரை ஓரளவு பெய்த மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில்
நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வரும், உபரி நீர் முழுவதும் மாயனுார் கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 813.64 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே மே மாதம் வரை கோடை காலத்தில், கரூர் மாவட்டத்தில் குடிநீருக்கு
பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 63.42 அடியாக இருந்தது. அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்களில், 1,290 கன அடி தண்ணீர்
திறக்கப்பட்டு வருகிறது.