தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா


ADDED : பிப் 22, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், முதன் முறையாக கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு திருவிழா, ஆயுதப்படை சமுதாய கூடத்தில், நேற்று கோலாகலமாக நடத்தப்பட்டது.

இதில், ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.ஐ., கதீஜாபேகம், ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர் பிராத்தனா ஆகியோருக்கு, போலீசார் சார்பில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பெண் எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவருக்கும், சீர்வரிசை பொருட்கள்

ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.பின், அவர்களுக்கு வளையல் அணிவித்து, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என, ஐந்து வகையான உணவு வகைகளை ஊட்டிவிட்டு, வளைகாப்பு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர்.

டி.எஸ்.பி.,க்கள் விஜயகுமார், கிருஷ்ணன், சங்கீதா, ராஜூ, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us