கரூர் அருகே சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
கரூர் அருகே சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
ADDED : பிப் 22, 2025 01:47 AM
கரூர் அருகே சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
கரூர்:கரூர் அருகே, சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் மற்றும் அவரது மனைவி மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மணவாடி கத்தாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர மூர்த்தி, 47; இவர் கடந்த, 18ல் அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமி அவரது வீட்டு பாத்ரூமில் குளிப்பதை, மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் சங்கர மூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது, சங்கர மூர்த்தி அவரது மனைவி விஜயலட்சுமி, 44; ஆகியோர் சிறுமியின் தாயை மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார் சங்கர மூர்த்தி, அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
