/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : பிப் 22, 2025 01:47 AM
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குளித்தலை: குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், நேற்று தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவரும் மற்றும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்களின் பணிகள் பாராட்டுதலுக்கு உரியது. மேலும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ.,கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயவேல் காந்தன், மண்டல தாசில்தார் நீதிராஜன். தனிதாசில்தார் மகாமுனி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் ஐந்து பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.