/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாஸ்மாக் கடையின் பூட்டைஉடைத்து மதுபாட்டில் திருட்டு
/
டாஸ்மாக் கடையின் பூட்டைஉடைத்து மதுபாட்டில் திருட்டு
டாஸ்மாக் கடையின் பூட்டைஉடைத்து மதுபாட்டில் திருட்டு
டாஸ்மாக் கடையின் பூட்டைஉடைத்து மதுபாட்டில் திருட்டு
ADDED : மார் 01, 2025 01:32 AM
டாஸ்மாக் கடையின் பூட்டைஉடைத்து மதுபாட்டில் திருட்டு
குளித்தலை: குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., மேல தாளியாம்பட்டியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், பணியை முடித்து விட்டு கணக்கு சரி பார்த்து, பணத்தை லாக்கரில் வைத்துவிட்டு இரவு, 11:15 மணியளவில் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில், மர்ம நபர்கள் கடப்பாரையால் டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவற்றில் துளையிட முயன்றுள்ளனர். முடியாததால் முன்பக்க கதவின் பூட்டு மற்றும் ஷட்டர் பூட்டுகளை கடப்பாரையால் உடைத்து, கடை உள்ளே புகுந்து, 18 உயர் ரக மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
லாலாப்பேட்டை போலீசார் நேரில் ஆய்வு செய்து, திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று விற்பனை செய்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டதால், இரண்டு லட்சம் ரூபாய் தப்பியது.