தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே அ.தி.மு.க., நிர்வாகி கைதுஸ்டேஷனுக்கு சென்ற மாஜி அமைச்சர்

கரூர் அருகே அ.தி.மு.க., நிர்வாகி கைதுஸ்டேஷனுக்கு சென்ற மாஜி அமைச்சர்

கரூர் அருகே அ.தி.மு.க., நிர்வாகி கைதுஸ்டேஷனுக்கு சென்ற மாஜி அமைச்சர்


ADDED : ஏப் 01, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் அருகே அ.தி.மு.க., நிர்வாகி கைதுஸ்டேஷனுக்கு சென்ற மாஜி அமைச்சர்

கரூர்:கரூர் அருகே, அ.தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர், டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்தனர்.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள், 49; தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை துணைத் தலைவர். இவர் நேற்று மாலை, வீட்டுக்கு நடைபாதை அமைக்க மண் கொட்டி, ஆக்கிரமிப்பு செய்ததாக பஞ்., கிளார்க் பழனிசாமி, அருளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அருள், தன்னை மிரட்டியதாக பழனிசாமி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் அருளை கைது செய்தனர். தகவல் அறிந்த, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று இரவு குவிந்தனர். அவர்களை, ஸ்டேஷன் முன் நிற்க கூடாது என, போலீசார் விரட்டினர். அப்போது, டவுன்

டி.எஸ்.பி., செல்வராஜ் உள்ளிட்ட போலீசாருக்கும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

'அ.தி.மு.க., நிர்வாகி அருள் மீது, பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல், அ.தி.மு.க., நிர்வாகி அருளை மிரட்டிய பஞ்., அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

டி.எஸ்.பி., செல்வ ராஜ், 'புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்துக்குள் சென்றனர். இதனால், அந்த பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நகை திருடிய 3 பேர் சிக்கினர்

நாமக்கல்:நாமக்கல் அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 30; இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் புணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 6.25 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன், 28, ரமேஷ், 37, தேவரஹள்ளியை சேர்ந்த குமரேசன், 28, என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, எஸ்.ஐ., மதன் தலைமையிலான தனிப்படை போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்த நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவல்படி, 11 பவுன் நகைகளை மீட்டனர். இதில், ரமேஷூக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், நாமக்கல் அரசு மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us