தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மூடி சேதமடைந்த நிலையில் குடிநீர்வால்வு குழி: வாகன ஓட்டிகள் அவதி

மூடி சேதமடைந்த நிலையில் குடிநீர்வால்வு குழி: வாகன ஓட்டிகள் அவதி

மூடி சேதமடைந்த நிலையில் குடிநீர்வால்வு குழி: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஏப் 09, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூடி சேதமடைந்த நிலையில் குடிநீர்வால்வு குழி: வாகன ஓட்டிகள் அவதி

கரூர்:கரூரில், குடிநீர் வால்வு குழியின் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. கரூர், மாரியம்மன் கோவில் தெரு வழியாக ரயில்வே ஸ்டேஷன், நெரூர், வாங்கல் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், மாரியம்மன் கோவில் பகுதியில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன.

இந்நிலையில் மாரியம்மன் கோவில் அருகே, சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக, சிலாப் கற்கள் அகற்றப்பட்டு, குடிநீர் வால்வு குழி திறக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வால்வு குழியின் மூடி சேதமடைந்துள்ளது. அதை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யவில்லை. இதனால், இரவு நேரத்தில் மாரியம்மன் கோவில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழியில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், விரைவில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்க உள்ளது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள, குடிநீர் வால்வு குழியை சிலாப் கற்கள் கொண்டு, பாதுகாப்பாக மூடி வைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us