/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மார்பக புற்று நோய் சிகிச்சை திட்டம்ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடக்கம்
/
மார்பக புற்று நோய் சிகிச்சை திட்டம்ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடக்கம்
மார்பக புற்று நோய் சிகிச்சை திட்டம்ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடக்கம்
மார்பக புற்று நோய் சிகிச்சை திட்டம்ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடக்கம்
ADDED : ஏப் 10, 2025 01:16 AM
மார்பக புற்று நோய் சிகிச்சை திட்டம்ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடக்கம்
கரூர்:கருப்பை வாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் ஏப்ரல் இறுதியில் தொடங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கருப்பை வாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சையளிக்கும் திட்டம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 101 நலவாழ்வு மையங்களில் பணியாற்றும் பயிற்சி பெற்ற இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள் பரிசோதனை செய்வர். மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களை, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்படுவர். பெண் சுகாதார தன்னார்வலர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு சென்று, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை, பரிசோதனைக்கு உட்படுத்துவர்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.