தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்

பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்

பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்


ADDED : ஏப் 10, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்

கரூர்:பெரிய பொன்னாச்சி அம்மன் கோவிலில், பங்குனி தேரோட்டம் நடந்தது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் அத்திப்பாளையத்தில் பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திருவிழா கடந்த, 1ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி சப்பரத்தில் உலா வரும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின், தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும், கூடி நின்ற திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின் தேர் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us