/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான குதிரை வாகனத்தில் சுவாமி உலாகல்யாண பசுபதீஸ்வரர் பக்தர்கள் அதிர்ச்சி

ADDED : ஏப் 11, 2025 01:20 AM
சேதமான குதிரை வாகனத்தில் சுவாமி உலாகல்யாண பசுபதீஸ்வரர் பக்தர்கள் அதிர்ச்சி
கரூர்:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில், சேதமான குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தேவார பாடல் பெற்ற, 274 சிவன் கோவில்களில், இது 211-வது ஆலயம். இங்கு பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது.
இதன்படி, நேற்று கரூர் வருவாய்துறை அலுவலர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் சார்பில், குதிரை வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், பல்லக்கில் அலங்காரவள்ளி சவுந்தரநாயகி திருவீதி உலா நடந்தது. இதில், வாகனத்தில் சுவாமியை ஏற்றும்போது, குதிரையின் காது உடைந்து விட்டது. இதை கூட சரி செய்யமால் சுவாமி ஊர்வலம் நடத்தினர். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னமாக (உடைந்த) குதிரையுடன் ஊர்வலமாக சென்றிருப்பது ஆகம விதிமீறலாகும். இந்த ஹிந்து சமய அறநிலைத்துறையினர், அர்ச்சகர்கள், சிவன் அடியார்கள் முன்னிலையில் நடந்தது.
இது குறித்து, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் கூறுகையில்,'' குதிரை வாகனத்தில் சுவாமியை ஏற்றும் போது காது உடைந்து விட்டது. அடுத்த நிகழ்ச்சிக்குள் சரி செய்யப்படும்,'' என்றார்.