/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னையில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவதுகுறித்து வேளாண் அதிகாரிகள் நேரடி விளக்கம்

ADDED : ஏப் 15, 2025 02:06 AM
தென்னையில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவதுகுறித்து வேளாண் அதிகாரிகள் நேரடி விளக்கம்
கரூர்:தென்னையில், ருகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தில், ருகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். தென்னையில் வேகமாக பரவி வரும், ருகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதலால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒருங்கிணைந்த மேலாண்மை மூலம் ருகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, கிரிசோபிர்லா இரை விழுங்கி முட்டை கொண்ட அட்டையை விவசாயிகளுக்கு வழங்கினார்.
வெள்ளை ஈக்களை கவரக்கூடிய கவர்ச்சி பயிராக கொய்யா, வாழை, சீதா போன்ற பயிர்களை நட்டால் வெள்ளை ஈக்கள் அதில் வரும்போது அதனை அழிக்கலாம் என்றும், மஞ்சள் விளக்கு பொறி ஒரு ஏக்கருக்கு, 2 என மாலையில் ஒளிர செய்து கவர்ந்து அழிக்கலாம் என தான்தோன்றிமலை, உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் வேளாண் அலுவலர் கவுரி, கரூர் வேளாண்மை அலுவலர் ரேணுகா தேவி ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.