/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

ADDED : டிச 25, 2024 02:14 AM
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக
ரூ.4.10 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
கரூர், டிச. 25-
கரூர் அருகே, ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க சார்பதிவாளரிடம், மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக, 4.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மூன்று பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வலையப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரன்,68; ஓய்வு பெற்ற, கூட்டுறவு சங்க சார்பதிவாளர். மாயனுாரை சேர்ந்த ஜெயபால், சென்னையை சேர்ந்த கதிர்வேல், இளையராஜா ஆகியோர் கடந்த, 2016 ல் ஆக., மாதம் பாலசந்திரனை சந்தித்து, அவரது மகனுக்கு, தமிழக மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பிய பாலசந்திரன், பல்வேறு தவணைகளில், 4.10 லட்சம் ரூபாயை ஜெயபாலிடம் வழங்கியுள்ளார். ஆனால், பாலசந்திரனின் மகனுக்கு ஜெயபால் உள்ளிட்ட, மூன்று பேரும், மின் வாரியத்தில் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து, பாலசந்திரன் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். ஜெயபால் உள்ளிட்ட, மூன்று பேர் மீது, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.