/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2025 01:32 AM
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணராயபுரம், :தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கிருஷ்ணராயபுரம் வருவாய் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன் நடந்தது.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அலுவலத்தில் மனு அளித்தால் அதற்கான பதில் கூறாமல் கிடப்பில் போடப்படுவது என்பன போன்ற பிரச்னைகள் தீர்க்க கோரி தாலுகா நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
விவசாய சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் சக்திவேல், வக்கீல்
சரவணன், பொருளாளர் சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.