ADDED : ஜன 11, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்னி பஸ் மோதிலாரி டிரைவர் பலி
கரூர், :தென்னிலையில், ஆம்னி பஸ் மோதிய விபத்தில், லாரி டிரைவர் உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 36, லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மதியம் தென்னிலையில் உள்ள, பெட்ரோல் பங்க் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற சிவகங்கையை சேர்ந்த குணசேகரன், 38, என்பவர் ஓட்டி சென்ற ஆம்னி பஸ், அருண்குமார் மீது மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் அருண்குமார், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, லாரி டிரைவர் அருண்குமாரின் மனைவி சுகன்யா, 34, கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.