/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : ஜன 11, 2025 01:35 AM
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
குளித்தலை,:குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம மக்கள் சார்பாக, 63ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வரும், 16ல் நடைபெற உள்ளது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆர்.டி. மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கான இடங்களை, ஆய்வு செய்ய கலெக்டர் தங்கவேல் உத்தரவின்படி, டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, ஊரகவளர்ச்சி உதவி இயக்குனர் சரவணன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கூட்டாக ஆய்வு செய்தனர்.
இதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், மாடுகள் வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், பார்வை
யாளர்களுக்கான இடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள், இறுதியாக நிற்கும் இடம், தடுப்பு வேலி, மருத்துவ சேவைக்கான இடம், பரிசு வழங்குவோர் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், மின் இணைப்பு, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து விழாக்கமிட்டியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
ஈ.வெ.ரா.,மீது அவதுாறு பேச்சு சீமான் மீது வழக்குப்பதிவு
கரூர்,:ஈ.வெ.ரா., குறித்து அவதுாறாக பேசியதாக, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் கடந்த, 8ல் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. அதில், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு பேசியதாக, கரூர் மாவட்ட தந்தை பெரியார் தி.க., செயலாளர் காளிமுத்து, தான்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, அவதுாறு பேசுதல் உள்ளிட்ட, மூன்று பிரிவுகளின் கீழ் தான்
தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.