/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுஅகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
/
அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுஅகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுஅகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுஅகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜன 17, 2025 01:11 AM
கரூர், :வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் பிளாஸ்டிக் கழிவு களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் அமராவதி ஆறு கேரள, தமிழக வனப்
பகுதியின் எல்லையையொட்டியுள்ள, மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி திருப்பூரை கடந்து, கரூரில் திருமுக்கூடலுாரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த டிசம்பரில் பெய்த பருவ மழையால், அமராவதி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்றில், 40 ஆயிரம் கன அடி தண்ணீருடன், சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு போன்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 85 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு சென்ற வெள்ளத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் கரூர் மாவட்டம் வரை, வழியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் அடித்து வரப்பட்டன. இந்த கழிவுகள் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வாய்க்கால் பாசனத்தில், தண்ணீர் முறையாக விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் அவதிப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, ஆற்றில் குவிந்து கிடக்கும் பல டன் பிளாஸ்டிக் கழிவுகளை, அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அகற்ற முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.