/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
/
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
ADDED : ஜன 23, 2025 01:23 AM
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
கரூர்,:கரூர் பஸ் ஸ்டாண்டில், இரண்டு பெண்களிடம் தங்க நகையை, திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி, 70; இவர் கடந்த டிச., 12ல், கரூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, காமாட்சி அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம், குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயா, 56, என்பவர் கடந்த, 6ல், கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகை திருட்டு போனது. இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.