/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா
/
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா
ADDED : ஜன 25, 2025 01:24 AM
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி, 1966 ஜன.,24ம் தேதி பதவி ஏற்ற நாளை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது பற்றியும், மாணவர் மனசு பெட்டி, மாணவர்களுடைய குறைகளை போக்கும் அலைபேசி எண்களான 1098, 14417 ஆகிய உதவி எண்கள் பற்றி எடுத்துரைத்தார்.
ஆசிரியை புவனேஸ்வரி, பெண் கல்வியின் முக்கியத்துவம், இணையவழி குற்றங்களிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, பெண் குழந்தைகள் சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், சுயமரியாதையோடு சமூகத்தில் செயல்படுவது, போக்சோ விழிப்புணர்வு பற்றி பேசினார்.
இதையடுத்து, பெண் குழந்தைகள் தின உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர். மேலும் ஆசிரியர்கள் ஷகிலாபானு, ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கவிதா, உஷா, நந்தினி உள்பட பலர் பங்கேற்றனர். மகிழ் முற்றம் குழு செயலர் சகாயவில்சன், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். மேலும் பெண்
ழந்தைகளுக்கான பாதுகாப்பு குழு கூட்டமும் நடைபெற்றது.

