/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : பிப் 01, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகள் அட்சயா, 21; இவர், புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்.,- சி.ஏ., படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்ற, அட்சயா திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், அட்சயா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த பிச்சைமுத்து, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.